சாதி ஒழிந்த சமூகத்தை உருவாக்க, தன்னை உருக்கித் திரைப்படம் செய்திருக்கிறார் மு.களஞ்சியம். ‘முந்திரிக்காடு’ வெறும் திரைப்படம் அல்ல. அது சாதி என்ற அழுக்கைத் துடைத்தெறிய தயாரிக்கப்பட்ட கலை ஆயுதம்.
முந்திரிக்காடு திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் அகத்தையும் புறத்தையும் பிரதிபலிக்கும் கலைக்கண்ணாடி. இயக்குநர் மு.களஞ்சியம் மனத்திலிருந்து துளிர்த்த அன்பின் விருட்சம் இந்நூல்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணத்தை முனைவர் பட்ட ஆய்வாளன் போல் மு.களஞ்சியம் ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குநரும் தமது படத்தில் நடிப்போருக்கு பாராட்டுரை பதிவிட்டு அதை நூலாக்கியதாய் வரலாறு இல்லை. இந்நூல்தான் அதற்கு முதல் தொடக்கம்.
முந்திரிக்காடு திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளை சுவாரசியமாக எழுதி உரிய படங்களோடு இந்தப் புத்தகம் சிறப்பாக வெளிவந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.